வணக்கம், என் பெயர் Karthik.நான் ஒரு ஜனநாயத் தூதர்.
நான் விக்டோரியத் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுகிறேன்.
நவம்பரில், நாங்கள் விக்டோரியா மாநிலத் தேர்தலை நடத்தினோம், அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து ஆஸ்திரேலிய குடிமக்களும் வாக்களித்திருக்க வேண்டும்.
நீங்கள் வாக்களித்ததற்கான ஓர் ஆவணம் விக்டோரியத் தேர்தல் ஆணையத்திடம் (VEC) இல்லையென்றால், நீங்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று கேட்கும் கடிதம் ஒன்றை நீங்கள் பெறலாம்.
இது ஒரு அபராதம் அல்ல.
உறையில், பின்வருவன இருக்கும்:
ஒரு படிவம்.
பல மொழிகளில் எழுதப்பட்ட வழிமுறைகள்.
மற்றும், திரும்ப அனுப்புவதற்கான கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு உறை.
அந்தப் படிவத்தில், நீங்கள் வாக்களித்தீர்களா இல்லையா என்று உங்களிடம் கேட்கப்படும்.
நீங்கள் வாக்களித்திருந்தால், எப்போது, எங்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தயவுசெய்து எங்களிடம் கூறவும்.
நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், நீங்கள் வாக்களிக்காததற்கான காரணத்தைக் கட்டாயம் விளக்க வேண்டும்.
நீங்கள் வாக்களித்தீர்களா இல்லையா என்பதை எங்களிடம் தெரிவிக்க, இந்தக் கடிதத்தை நீங்கள் பெற்ற தேதியிலிருந்து 28 நாட்கள் உள்ளன.
இந்தப் படிவத்தைத் திரும்ப அனுப்புவதற்கான கட்டணம் செலுத்தப்பட்ட உறையில் வைத்து, முடிந்தவரை விரைவில் எங்களுக்குத் திரும்ப அனுப்பவும்.
தயவுசெய்து கடிதத்தைப் புறக்கணிக்க வேண்டாம். நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு அபராதம் விதிக்கப்படலாம்.
படிவத்தை நிரப்ப உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை எண்ணை 9209 0112 -இல் அழைக்கவும் அல்லது vec.vic.gov.au என்ற எங்கள் இணையதளத்துக்குச் சென்று, மொழிபெயர்த்துரைப்பாளர் சின்னத்தைத் தேர்ந்தெடுக்கவும்.